

கூட்டுகுடும்பம்!!!
இந்த வார்த்தை இன்று அரிதாகி வருகிறது.
தாத்தா,பாட்டி,சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை,பெரியம்மா,பெரியப்பா,
இதுவே தமிழ்குடும்பம்.
ஆனால் இன்று!!!
அம்மா,அப்பா,அக்கா,தம்பி இது இப்போதைய குடும்ப உறவுகள்.
கூட்டுகுடும்பம் என்ற வார்த்தை இன்று அழிந்து வருகிறது.
இதனால் யாருக்கு என்ன பயன்???
இதனால் அதிகம் பாதிக்கபடுவது குழந்தைகளும்,பெரியவர்களும் தான்.
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு அறிவு,வீரம் போன்றவை தாத்தா,பாட்டிஇனர் கதைகள் மூலம் புகட்டப்படும்,
ஆனால் இன்று???
எந்த குழந்தைகள் தாத்தா,பாட்டி,கதைகளை கேட்கமுடிகிறது,
வயசான காலத்தில் பேரபிள்ளைகள் நம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்பும் முதியவர்களுக்கு கடைசியாக அடைக்கலம் தருவது முதியோர் காப்பகங்கல்தான்.இந்த நிலைதான் அனாதை காப்பகங்களும்,முதியோர் காப்பகங்களும் உருவாக காரணமாகிறது.
பெரியவர்களும் குழந்தைகள் தான் என்பதை நம்மில் பலர் உணர மறுக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு.இன்றைய இளைஞன் நாளைய முதியவன் என்பதை நாம் மாறாக கூடாது.மறக்கவும் முடியாது.
முதியோர்களை காப்போம்!!! முதியோர் இல்லத்தை அழிப்போம்!!!


No comments:
Post a Comment