WELLCOME TO TAMILANVAALVAAN.BLOGS.

Monday, September 6, 2010

சிந்தியுங்கள் தோழர்களே!!!

இந்தியா ஒழிக!!! இந்திய அரசு ஒழிக!!!

நான் சமீபத்தில் கடந்த ஆண்டு நடந்த வைகோ மற்றும் சீமான் அவர்களின் மாநாடு மற்றும் கட்சி கூடங்களில் நடந்த சொற்பொழிவின் வீடியோ காட்சிகளை பார்த்தேன்.பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.நீங்கள் மேலே கண்ட வாசகம் சீமான் அவர்களின் திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம் ஈழத்திற்கு ஆதரவாக நடத்திய மாநாடில் மாநாடுக்கு வந்தவர்கள் சிலர் பேசியது.தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ள படுவதாகவும் அவர்களின் பாதுகாப்பிற்கு இந்திய அரசு எந்த மதிப்பும் அளிக்க வில்லை என்றும் சீமான் பேசினார்.இந்திய மீனவர்கள் கட்ச தீவு வரை மீன் பிடிக்க இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது என்று இந்திய-இலங்கை ஒபந்தம் கூறியது.ஆனால் இன்று அந்து மீறப்பட்டுள்ளது.அதோடு மட்டும் இன்றி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதலும் நடத்துகிறது.இது மிக பெரிய தவறு.இதில் இந்தியாவின் தவறு ஒன்று இல்லை.இது ஆட்சியில் இருப்பவனின் தவறு அவனை தட்டி கேட்காமல்,ஓட்டு அதிகாரத்தை முறையாகபயன்படுத்தாமல்,இந்தியா ஒழிக!!! இந்திய அரசு ஒழிக!!! என்று குரல் கொடுப்பது மகா முட்டாள் தனம்!!!
இது
ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ம தி மு க தலைவர் வைகோ அவர்களின் பேச்சை கேட்டபோது இன்னொரு அதிர்ச்சி.2009 ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சியில் நடந்தது.அதில் வைகோ அவர்கள் இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள்,ராணுவ பயிற்சிகள் தருவதாகவும் கூறினார்.இந்த நிலை நீடித்தால் இன்னும் 10-15 வருடங்களில் இந்திய வரைபடத்தில் தமிழ் நாடு என்னும் ஒரு மாநிலம் இருக்காது,காரணம் தமிழ் நாடு தனி நாடாகிவிடும் என்று பேசினர்.அவர் பேசி முடித்ததும் பெரிய
கைதட்டுகள்.நான் வீடியோவில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன்.காரணம் இந்த வைகோ தான் ஒருசில வருடங்களுக்கு முன்பு பெரியார் தீவு திடலில் நடந்த மாநாடு ஒன்றில் இந்திய அரசுக்கு ஆதரவாக பேசினார்.அவர் அப்போது இந்திய அரசுக்கு ஆதரவாக பேச காரணம் திமுக-காங்கரஸ் உடனான கூட்டணி.இன்று இந்திய அரசை எதிர்க்க காரணம் திமுக-காங்கிரஸ் கு எதிரான கூட்டணி.இப்படி கூட்டணி மாற மாற இவர்களின் வார்த்தைகளும் மாறுகின்றன.இப்படி வார்த்தைகளை மாற்றி மாற்றி பேசுபவர்கள் ஈழத்தை காக்கிறாராம்.இதை விட கொடுமை தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் மிகபெரிய பிரச்சனை இப்படி பொதுவான பிரச்சினை இவர்களின் அரசியல் தேவைகாக பந்தாடபடுகிறது.நாமும் வெக்கம் இல்லாமல் கைதட்டி சிரிக்கிறோம்.
பேரறிஞர் அண்ணா சொல்லுவார் மாநாட்டில் மேடைக்கு கீழே இருப்பவன் கை தட்டுவதை விட்டு விட்டு மேடையில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டால் மேடையில் யாரும் பேச தயங்குவார்கள்.கீழே இருப்பவன் வெறும் கை மட்டும் தட்டும் வரை மேடையில் இருப்பவன் என்ன வேண்டுமானாலும் பேசுவான்.நாம் இன்னும் கை மட்டும் தட்டி கொண்டு இருப்பதால் தான் மனிதாபிமான அடிப்படையான ஒரு பிரச்சனைக்காக சம்மந்தமே இல்லாமல் இன உணர்வை எழுப்புகிறார்கள்.ஈழத்தில் கொள்ளபடுவது தமிழன் அல்ல மனிதன்.இங்கே இன உணர்வு கூடாது மனித உணர்வே வேண்டும்.இதில் தமிழகத்தை விட இந்தியாவே அக்கறை காட்ட வேண்டும்.இதை நாம் இந்திய மக்களுக்கு உணர்த்த வேண்டும்.உணர மாறுபவர்களை மாற்ற வேண்டும் அதை விட்டு விட்டு தமிழ் நாட்டை தனி நாடகுவோம் என்பதும் அரசியல் தலைவர்களை,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை தரக்குறைவாக பேசுவதும் நாகரிகம் அற்றது.நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட இந்த ஒரு நல்ல தலைவனும் மக்களின் உணர்வுகளை தூண்டி விட என்ன மாட்டான்.அப்படி துண்டி விட எண்ணுபவன் நல்ல தலைவனும் அல்ல.இனிமேலாவது யார் பேசினாலும் கைதட்டாமல் அவர் என பேசுகிறார் என்று சற்று காது கொடுத்து சிந்தியுங்கள் தோழர்களே!!!











Tuesday, August 10, 2010

புலிகளை காப்பாற்ற ஒன்று படுவோம்!!!

AIRCEL நிறுவனம் அழிந்துவரும் இனமான புலிகளை பாதுகாப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கிவருகிறது.இந்த நிறுவனம் இதற்கென தனி இணைய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.புலிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்கள் இதில் உள்ளன.

thanks to http://www.sindhikkalam.blogspot.com/

இந்திய பணத்தின் புதிய வடிவம்:


இந்திய பணத்தின் புதிய வடிவம்:சர்வதேச அளவில் இந்திய ஒரு தவிர்க்க முடிய தனிபெரும் சக்தியாக வளர்ந்து வருகிறது.இந்த நேரத்தில்இந்திய அரசு இந்திய பணத்திற்கு புது வடிவம்கொடுத்துள்ளது.இந்திய நாணய புது வடிவம் பற்றியபோட்டி டெல்லி-இல் நடந்தது.இதில் சென்னை IIT மாணவர் உதயகுமார் என்பவர் வெற்றிஅடைந்தார்.இந்த நாணய அடையாளத்திற்குநாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.வெற்றிபெற்ற உதயகுமாருக்கு 2.5 லட்சம் பணம் பரிசாகதரப்பட்டது.அமெரிக்க டாலர்,பிரிட்டிஷ்பவுண்ட்ஸ்,ஐரோப்பியன் யுரோ,ஜப்பான் யன்,இனிஇதனை தொடர்ந்து இந்தியாவின் புதிய பணஅடையாளமும் பட்டியலிடப்படும்.இந்தஅடையாளம் தற்போது பயன்படுத்தப்படும் 'Re' அல்லது 'Rs' கு மாற்றாக பதிவுசெய்யப்படும்.தற்போது இதுபாகிஸ்தான்,நேபாள்,ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும்அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பயன் படுத்தப்படும்

Friday, July 30, 2010



இது தான் ஜனநாயகமா???


உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு இந்தியா.உண்மைதான்.உலகின் பல நாடுகள் இந்தியாவை மதிக்கின்றன.காரணம் இந்தியா 7 வது பெரிய நாடு என்பதற்கோ அல்லது உலகின் 6 வது இராணுவ வல்லரசு என்பதற்கோ அல்ல மாறாக மக்களாட்சியை 70 ஆண்டுகளை தாண்டியும் கடைபிடிக்கும் நாடு என்ற ஒரு காரணத்தால் மட்டுமே.உலகில் பல நாடுகள் இந்தியாவிற்கு சிவப்புகம்பலம் விரித்து வரவேற்பதற்கு இதுதான் காரணம்.ஆனால்
மக்களிடம் வாக்கு பெற்று நாடாளுமன்றம் செல்லும் வெற்றியாளர்கள் நாடு,மக்கள் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தன்னுடைய முன்னேற்றத்தை மட்டும் குறியாக கொண்டு செயல் படுகிறார்கள்.இவர்களுக்கு ஓட்டு போடும் மக்களின் நிலை ஆண்டிதான்.
இந்த வெற்றியாளர்கள் போய்வர இலவச விமானம்,முதல் வகுப்பு ரயிலில் இலவசம்,பாராளும் மன்றம் செல்ல வாகனம்,பேசுவதற்கு மைக்,உக்கார நாற்காலி,வியர்க்காமல் இருக்க மின்விசிறி இவை அனைத்தும் முற்றிலும் அனாவசியமாக எனக்கு படுகிறது.காரணம் அவர்கள் இலவசமாக பயன்படுத்தும் அனைத்தும் கடைசியாக செல்லும் இடம் காயலாங்கடை?
மீண்டும் புதிதாக பொறுத்த பல கோடி பணம் செலவாகும்.இதுக்கு பணம் மகளின் வரிப்பணம்??சரி இப்படி நடபவர்களுக்கு மக்கள் தரும் தண்டனை மறு தேர்தலில் வெற்றியை தருகிறார்கள் கேவலம் பணத்திற்காக???


பேரறிஞர் அண்ணா ஒரு கருத்தரங்கில் சொன்னார் 'இந்த நாடும் நாடு மக்களும் நாசமாய் போகட்டும் என்று' இந்த நிலை தொடருமானால் அண்ணாவின் இந்த சாபம் கட்டாயம் பழிக்கும் என்பதில் மற்று கருத்து இல்லை.

Wednesday, May 12, 2010

தலை வணங்குகிறேன்!


தலை வணங்குகிறேன் பெண்ணே!!!

வெற்று வசனம் பேசி ஊரை ஏமாற்றாமல்!
பழங்கதை பேசி நேரத்தை வீணாக்காமல்!
தொலைகாட்சி சீரியல் பார்த்து அழாமல்!

நாளை நமதே!இந்த நாடும் நமதே!
என்ற எண்ணம் கொண்டு
எல்லையில் நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி நிற்கும் பெண்ணை
உன்னை நான் வணங்குகிறேன்!!!

Wednesday, May 5, 2010

தமிழனை அவமானபடுத்தும் கூகுள்.

தமிழன் உலகத்திற்கே கலாச்சாரத்தை கற்றுகொடுத்தவன்,
கல் தோன்றி,மண் தோன்றா காலத்தில் கணத்த புகழுடன் தோன்றிய குடி தமிழ்குடி,
விருந்தோம்பலில் தமிழன் தலை சிறந்தவன்,

எல்லாம் சரி இன்று தமிழனை உலகம் எப்படி நினைக்கிறது???
சோதனை செய்ய கூகிள் -கு செல்லுங்கள்,பின் கூகுளின் மொழியை தமிழ் மொழிக்கு மாற்றி கொள்ளுங்கள்.
பின் 'a' என்று டைப் செய்து enter செய்யாமல் கீழே வருவதை பாருங்கள்.
கீழே வருவது என்ன??
1,அக்கா நித்யாவுடன் ஒரு அருமையான அனுபவம்!
2,அத்தை கதைகள்!
3,அனிதா அண்ணி!
4,அக்காவின் ஆசை!
5,அண்ணி நான்!
6,அக்கா தம்பி!
7,அண்ணியை!
8,அண்ணி கதைகள்!
9,ஆண்மை விருந்தற்கு!
10,அழகு குறிப்பு!

இவையே

'a' என்று பொருள் படும் 'அ' என்ற தமிழ் வார்த்தையில்
1,அன்பு,
2,அப்பா,
3,அம்மா,
4,அறிவு,
என்று பல நல்ல வார்த்தைகள் இருந்தும் பன்னாட்டு தேடுபொறி நிறுவனமான் கூகுள் மேற்சொன்ன வார்த்தைகளை தமிழில் அதிகம் பயன்படுத்துகிறது.
காரணம்???
பன்னாட்டு நிறுவனங்கள் தமிழனை காமுகனாக நினைகின்றன.

Monday, May 3, 2010

இந்த மாற்றம் நல்லதல்ல!!!



கூட்டுகுடும்பம்!!!
இந்த வார்த்தை இன்று அரிதாகி வருகிறது.
தாத்தா,பாட்டி,சித்தி,சித்தப்பா,மாமா,அத்தை,பெரியம்மா,பெரியப்பா,
இதுவே தமிழ்குடும்பம்.

ஆனால் இன்று!!!
அம்மா,அப்பா,அக்கா,தம்பி இது இப்போதைய குடும்ப உறவுகள்.
கூட்டுகுடும்பம் என்ற வார்த்தை இன்று அழிந்து வருகிறது.
இதனால் யாருக்கு என்ன பயன்???
இதனால் அதிகம் பாதிக்கபடுவது குழந்தைகளும்,பெரியவர்களும் தான்.
முன்பெல்லாம் குழந்தைகளுக்கு அறிவு,வீரம் போன்றவை தாத்தா,பாட்டிஇனர் கதைகள் மூலம் புகட்டப்படும்,
ஆனால் இன்று???
எந்த குழந்தைகள் தாத்தா,பாட்டி,கதைகளை கேட்கமுடிகிறது,
வயசான காலத்தில் பேரபிள்ளைகள் நம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்பும் முதியவர்களுக்கு கடைசியாக அடைக்கலம் தருவது முதியோர் காப்பகங்கல்தான்.இந்த நிலைதான் அனாதை காப்பகங்களும்,முதியோர் காப்பகங்களும் உருவாக காரணமாகிறது.
பெரியவர்களும் குழந்தைகள் தான் என்பதை நம்மில் பலர் உணர மறுக்கிறோம்.
எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு.இன்றைய இளைஞன் நாளைய முதியவன் என்பதை நாம் மாறாக கூடாது.மறக்கவும் முடியாது.

முதியோர்களை காப்போம்!!! முதியோர் இல்லத்தை அழிப்போம்!!!

Friday, April 16, 2010

இது முட்டாள் தனம்!!!

"நக்சலைட்டுகளை ஒடுக்க இரண்டு வாரத்தில் இறுதி முடிவு,ப.சிதம்பரம் மாநிலங்களில் அறிக்கை"
இது மிகவும் காலதாமதமான முடிவு.எந்த ஒரு கலவரமும் அதன் ஆரம்பத்திலேயே கில்லி எறியப்பட வேண்டும்.இந்திய நாட்டின் ஒரு மாநிலம் இதனால் பாதிக்கப்பட்டு மற்ற மாநிலங்களுக்கும் நக்சல்கள் பரவிவிட்டார்கள்,
ஆரம்பத்தில் சும்மா இருந்துவிட்டு இப்போது குத்துதே,குடையுதே என்றால் எப்படி,எந்த ஒரு தீவிரவாத குழுவும் எளிதில் பெரிய அளவில் வளர்வதில்லை.
இன்று பல கோடி ரூபாய்கள் அவர்களிடம் போர் கருவிகள் வாங்கும் அளவிற்கு வுள்ளன இவ்வளவு பணம் அவர்களுக்கு எப்படி வந்தது,வரும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்தார்கள்?என்று பல கேள்விக்கு விடை தேடாமல் அவர்களை அழிப்போம் என்று சொல்வது முட்டாள்தனம்.

அறிவு வேண்டும் நம்மவருக்கு!!!


அறிவு வேண்டும் நம்மவருக்கு!!!

"பிரேசில் நாட்டில் "பிரிக்" மாநாடு இந்திய பிரதமர் பிரேசில் பயணம் வுடன் தன் மனைவியும் அழைத்துசெல்கிறார்"
பிரேசிலில் பிரதமற்கும் அவரது மனைவிக்கும் சிவப்புகம்பள வரவேற்பு.
மாநாட்டில் கலந்து கொள்பவர் பிரதமர் மட்டும் தான், அப்படியானால் அவரது மனைவிக்கு அங்கு என்ன வேளை?அவர் பிரேசிலை சுற்றி பார்கிறராம்!
அங்கு அவர் செல்லும் இடமெல்லாம் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்வர்கள்,செல்லும் இடமெல்லாம் சிவப்பு கம்பள வரவேற்பு அதுவும் இந்திய அரசின் பணத்தில்! நம் நாட்டில் பலர் உண்ண வுணவின்றி இருக்கும் போது இந்த வூர் சுற்றுதல் தேவையா?ஒவ்வெரு முறை பிரதமர் மாநாடு செல்லும் போதும் அவரது பாதுகாப்பிற்காக பல கோடி ரூபாய்கள் செலவிடப்படும் இப்போது பிரதமர் தன் மனைவியுடன் செல்வதால் அந்த செலவுடன் இன்னொரு மடங்கு தண்டசெலவு வேறு.


"பிரதமர் ஆனாலும் அறிவு வேண்டும்"

முடிவல்ல ஆரம்பம்!!!


இந்தியாவின் GSLV-D3 தோல்வி!!!,
வுலகில் ராகேட் செலுத்துவதில் 3 இடத்தில வுள்ள நாடு இந்தியா.
இந்தியா சொந்தமாக தயாரித்த கேரயோஜெனிக் பொருத்தப்பட்ட ராக்கெட் அது.
இதுவரை இந்தியா இரசிய கேரயோஜெனிக் வைத்துதான் ராக்கெட் செலுத்தியது.தானே சொந்தமாக கேரயோஜெனிக் என்ஜின் தயாரிக்க வேண்டும் என்று எண்ணியதே பாதி கிணறு தான்றியதற்கு சமம் பாதி கிணறு தான்றியவனுக்கு மீதி கிணறு தான்றுவது சிரமமல்ல.
எனவே இது

முடிவல்ல ஆரம்பம்!!!

தேவை கவனம்!!!

ராமநாதபுரம் மாவட்ட காவேரி குடிநீர் திட்டத்திற்கு 500 கோடி,
கிராம வுரட்சிக்கு மொத்தமாக 200 கோடி,
கிராம ஏழை பெண்களுக்கு கல்வி முன்னேற்றம் அடைய 900 கோடி,
வீடு இல்லாத குடும்பத்திற்கு இலவச வீடு கட 1000 கோடி,
நியாய விலை கடையில் 1 ரூபாய்க்கு அரிசி,

இது போன்ற செய்திகள் சட்டமன்றத்தில் இருந்து வெளிவரும்போது கேட்கவும் படிக்கவும் சந்தோசமாக இருக்கும்.அதோடு நிறுத்தி அதை மறந்து விட வேண்டும்,
"உலகில் நம் ஆட்சியாளர்கள் தான் சிறந்த திட்டங்களை எடுக்கிறார்கள்?
பிறகு ஏன் இன்னும் நம் நாடு பின்தங்கி வுள்ளது?"
நல்ல திட்டங்களை எடுக்கும் நம் அறிவாளிகள் அதை செயல் படுத்துவதில் தான் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.எந்த ஒரு திட்டமும் அதை வகுப்பதை விட முறைபடுத்தும் முறையில் தான் நல்ல திட்டம் என்ற புகழபடும்.ஆனால் நம் ஆட்சியாளர்கள் சட்டம் தீட்டும் போது இருக்கும் அளவிற்கு ஆர்வம் நடைமுறை படுத்தும் போது இல்லை.அதனால் தான் இன்னும் நம் நாடு வளரும் நாடாக வுள்ளது.
எனவே திட்டங்களை எடுப்பதை விட அதை நடைமுறை படுத்துவதில் அதிக கவனம் தேவை.

Wednesday, April 14, 2010

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!
























சுதந்திர இந்தியா...,

சும்மா கிடைக்கவில்லை இந்த பெயர்.பலர் தன் இன் உயிரை துச்சமாக நினைத்து பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இது.இன்று நம்மில் பலருக்கு கிரிக்கெட் விளையாடும் போது மட்டும் தான் தான் இந்தியன் என்பது நினைவுக்கு வருகிறது.நமக்காக ராணுவ வீரர்கள் பனி என்றும் வெயில் என்றும் பாராமல் பாடுபடும் போது நாம் கொடி நாளுக்கு கூட பணம் தருவதில்லை.அதை விட கொடுமை நம்மில் பலர் சுதந்திர,குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதே கிடையாது.
கல்லூரியில் புகை பிடிக்க தடை விதித்தால்
"என்ன சுதந்திரம் இது ஒரு தம் அடிக்ககுட சுதந்திரம் இல்லையா நாட்ல, எதற்கு சுதந்திரம் வாங்கினார்களோ பேசாம இங்கிலிஷ்கரானே இருந்திருக்கலாம்"என்று நக்கல் அடிக்கிறோம்.சுதந்திரம் என்பது வுன்னை,வுன் சராசரி வுரிமையை பாதுகாக்கவும்,வுன்னை அடுத்து வரும் தலைமுறையை பாதுகாக்கவும்,நாட்டை பாதுகாக்கவும் தானே தவிர தம் அடிக்கவும், தண்ணி அடிக்கவும் அல்ல.
எவனோ ஒரு தறுதலை அவனுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக நம் நாட்டு கொடியை எறிகிறான் எதுத்து கேக்க வக்கில்லை.கேட்டால் வெளிஉறவு கொள்கை என்று கூறுவது.நம் தேசிய கொடியை எரிப்பது நம்மை எரிபதற்கு சமம்,நம்மையே எரிக்க துணிந்தவனிடம் வெளிஉறவு கொள்கை எதற்கு.இன்னொரு கிழவி நம் தேசிய கொடி மீதே கால்வைத்து அமர்ந்து இருகிறாள் என்ன தைரியம் அந்த கிழட்டு நாயிக்கு.இதை பேப்பரில் படித்தால் அதிக பட்சம் போனால் பத்துநிமிஷம் அவர்களை திட்டுவோம் பிறகு நம் வழக்கமான பணிக்கு சென்று விடுவோம் இது தான் நம் தேச உஎரை???

Tuesday, April 13, 2010

நெஞ்சம் பொறுப்பதிலை!!!



வீதிஓரம் சென்ற சிறுவன் கவலையோடு பார்த்தான் பள்ளி சென்ற சிறுவர்களை தன் அம்மாவிடம் சென்று தன் கவலையை கூறினான்,வியாபாரத்திற்கு சென்ற அவன் தந்தை கவலையோடு தன் துணைவிஇடம் கூறினான் "இன்று வியாபாரம் நன்று நடக்கவில்லை வரும் வழியில் ஜோசியரை பார்த்தேன் நமக்கு யதோ தோஷம் பிடித்திருக்காம் வடபழனி முருகன் கோவிலில் காணிக்கை கொடுத்தால் யல்லாம் சரியாகிடுமம்" என்று ஜோசியர் கூறினார் என்று அவர் சொல்ல இருவரும் இருவரும் சேர்ந்து 10000 ரூபாய் கடன் வாங்கி தோஷம் களித்தனர்.இதனால் அவர்கள் பெரிதாக என்ன கிடைத்துவிடபோகிறது.அந்த 10000 ரூபாயை அவன் தொழிலில் முதலிடு செய்தல் அவன் முதலாளி ஆகி இருப்பான்.எதோ ஒரு கல் மீது அவன் வைத்திருந்த நம்பிக்கையை அவன் தன் மீது வைத்திருந்தால் அவன் வளர்ந்திருப்பான்.நம் முன்னோர்கள் செய்த மிகபெரிய தவறு கடவுளை வுருவம் கொடோதடு.அதை விட பெரிய தவறு தன்னை விட அவன் மீது அதிக நம்பிக்கை வைத்தது.கோவில் இல்லாத வூரில் குடி போக கூடாது என்று பழமொழி சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.அதனால் தான் இன்று எல்லா வுர்களிலும் கோவில்கள் கோபுரங்களாகவும்,மாளிகையாகவும் வளர்ந்துள்ளன.அதை விட கொடுமை நம் நாட்டில் எத்தனையோ குழந்தைகள் பாலின்று இறக்கும் போது நம் கோவில்களில் வெறும் கல் சிலைக்கு பால் அபிஷேகம் நடத்தபடுகிறது.நம் வூரில் பலர் நல்ல வுணவின்றி இருக்கும் போது கோவில்களில் கல்லுக்கு வெய்னையகவும் நெய்யாகவும் அபிஷேகம் செய்யபடுகிறது.இதை விட கொடுமை பல கோடிகள் கோவிலில் காணிக்கை தரபடுகிறது.இதை தவிர தங்கம், வைரம்,வெள்ளி, என பல காணிக்கைகள் தரபடுகிறது.இல்லாத ஒன்றுக்கு இங்கே நடக்கும் கொடுமையை என்னவென்று கூறுவது.இந்த பணத்தில் பலருக்கு கல்வி,வுணவு தந்திருக்கலாம்.

என் நண்பர்களே கோவிலுக்கு செல்லுங்கள் தவறில்லை.ஆனால் ஒரு பைசா கூட காணிக்கை போடதிர்கள்.


கடவுளை மாற!!! மனிதனை நினை!!!