WELLCOME TO TAMILANVAALVAAN.BLOGS.

Wednesday, September 21, 2011

“எங்கெங்கு காணினும் போலிகளடா!”

“எங்கெங்கு காணினும் போலிகளடா!” என்று சொல்லும் அளவுக்கு போலிகள் நிறைந்துள்ள காலமிது. போலி மருத்துவர்கள் கைது, போலி மருந்துகள் பறிமுதல் என்றெல்லாம் செய்திகள் வரும்போது நம் இதயத்துடிப்பு எகிறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.

போலி எது? அசல் எது? என்று அவ்வளவு எளிதாகப் பிரித்தறிய இயன்றிடாதபடி நடமாடும் இந்த ”பசுத் தோல் போர்த்திய பன்றிகளிடமிருந்து” தப்பிக்க வழி தான் என்ன? என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் நச்சென்று நான்கு இணைய தளங்கள் கிடைத்தன. அவற்றைப் பகிரும் முகம் தான் இப் பதிவு… நோய், மருந்து, மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!

முதலாவதாக Drugs.Com இணைய தளம் பற்றி,

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த மருந்து விற்பன்னர்கள் சேர்ந்த்து நடத்தும் Drugsite Trust ஆல் நடத்தப்படும் இணைய தளம். 107,000 மருந்துகள் A to Z வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Food and Drug Administration (FDA) புதிதாக அங்கீகரிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. இத்தளத்தினை எவ்வாறு உபயோகிப்பது?

நம்ம ரஜினி சிவாஜி படத்துல வெள்ளையா மாற ஒரு கிரீம் போடுவாறே அது மாதிரி “ஆறே வாரங்களில் சிகப்பழகு பெற” எதாவது கிரீம் போடுறீங்களா? அந்த மருந்து அட்டையில் உள்ள அதன் வேதிப் பெயரைக் கண்டறியுங்கள்… உதாரணத்திற்கு, Hydroquinone. இதனை இத் தளத்தில் உள்ளீடு செய்து தேடு என்று கட்டளை பிறப்பித்தால்,

இந்த மருந்து நம் உடலில் செய்யும் மகத்துவங்கள் என்ன?

மருந்தை உபயோகிக்கும் முன் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்?

எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?

அளவுக்கு அதிகமானால் (Over Dose) என்னென்ன பிரச்சினைகள் வரும்?

என்று எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறது.

இதன் மூலம் நமக்கு மருந்தெழுதிக் கொடுத்த Doctor, அந்த மருந்தை எடுத்துக் கொடுத்த Pharmacist ஆகியோர் (போலிகளாக இருக்கும் பட்சத்தில்) தவறுகளைத் தவிர்க்கலாம். உண்மையில் அந்த மருந்து நமக்குத் தேவை தானா? இல்லை காசுக்கு வந்த கேடா? என்றும் அறியலாம்.

மருந்துகளில் இருக்கும் USP, IP, BP என்ற எழுத்துக்களை பார்த்திருக்கிறீர்களா? அப்படின்னா,

USP: United States Pharmacopeia
IP: Indian Pharmacopeia
BP: British Pharmacopeia

என்று பொருள் படும் . எந்த நாட்டு மருத்துவ விதிகளின் படி உருவாக்கப்பட்ட கலவை இந்த மருந்து என்பதனைக் குறிக்கும்.

Friday, September 16, 2011

‎* பணமும், வசதி வாய்ப்புகளும் வந்து போகக்கூடியவை.
மனித சமூகம் செல்வத்தை தேடி ஓடிக் கொண்டு இருக்கிறது.
வாழ்க்கை பொருளுடையதாக இருக்கவேண்டுமானால், பொருள் தேடுவதோடு அருளையும் தேட வேண்டும்.

* சுயநலமற்ற சேவை மட்டுமே மனசாந்தியைத் தரவல்லது.
நமக்குள் இருக்கும் தெய்வீக சக்தியை சேவை வெளிக்கொணர்ந்து விடும் ஆற்றல் கொண்டது.

* தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் இருக்குமானால்,
முதலில் தொண்டனாக சேவை செய்யும் அனுபவத்தைப் பெறவேண்டும்.

* எவன் ஒருவன் சுகம், துக்கம் எல்லாவற்றையும் சமமாக எண்ணுகிறானோ
அவனே வாழ்வின் உண்மையை உணர்ந்தவன் ஆவான்.

* கடந்த காலம் திரும்புவதில்லை. வருங்காலம் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது.
நிகழ்காலத்தை நல்ல முறையில் கழிப்பதே அறிவாளியின் செயல்.

* பிறக்கும்போது ஆபரணங்களுடன் பிறப்பதில்லை. ஆனால்,
முற்பிறவியில் செய்த செயல்களின் வினைப்பயனை அணிந்து கொண்டு வருகிறோம். யாராக இருந்தாலும் இதில் தப்ப முடியாது.

Monday, September 12, 2011

நீ...

நீ...
சுதந்திரவிழா கொண்டாட்டம்!
பாதுகாப்பு படை சூழ,
பாரததலைவர்கள் கொடியேற்றம்.
சுதந்திர நாட்டில் சுதந்திரமில்லை
நம் தேசிய கொடுயேற்ற.
ஏனிந்த நிலை? எதற்கிந்த பாதுகாப்பு?
உன் பாதுகாப்புக்காக
பாதுகாவலன் சுதந்திரம் பறிபோகிறதே.
அவர்களுக்கு சுதந்திரமில்லையா?

அதுமட்டுமா இங்கே.
கட்சி பொதுகூட்டமொன்று;
கட்டுக்கடங்கா மக்கள்வெள்ளம்;
கட்டுப்படுத்த காவலர் வெள்ளம்;
யாரந்த தலைவர்?
நீதியின் மறுபிறவியா?
ஏழையின் பாதுகாவலனா?
அப்படியே இருப்பினும்
அவனும் மனிதன்தானே;
அவன் தன்கடமையின்
சிறிதை தானே செய்தான் - பின்
ஏனிந்த ஆடம்பரம்?
எத்ற்கிந்த செலவுகள்?
அதனால் உனது நிலைதான் என்ன?
அதில் உன் பங்குதான் என்ன?
கட்சிக்காக கொடிபிடிக்கிறாய்,
போஸ்டரும் பேனரும் ஒட்டுகிறாய்,
கடவுளாகவும் அவரை வணங்குகிறாய்,
கூட்டம் சேர்க்கிறாய்,
ஆர்ப்பாட்டம் செய்கிறாய்,

ஆனால் நீ ஒன்றை சிந்தித்துபார்!
அன்றைய வருமானம் போயிற்று!
நாட்டின் வருமானம் போயிற்று!
நாட்டின் வளர்ச்சி போயிற்று!
நம் வரிபணம் இம்மாநாட்டினால்
மண்ணோடு மண்ணாய் போயிற்று!
மக்கள் சந்தோஷம் போயிற்று!
ஒலிஒளியால் அவ்வூர் மக்களின்
அமைதி போயிற்று!
கல்விகுழந்தைகளின் கல்வியும்
சிறு குழந்தையின் உறக்கமும்
அவ்வொலிஒளியால் காற்றாய் போயிற்று!

அதுமட்டுமா நடக்கிறது அங்கு,
மக்கள் நெரிசலால் அங்கு
சாலை திணருகிறது.
அத்தலைவரின் வருக்கைக்காக
சாலையோர தோரணங்களும்,
வானவேடிக்கையும், பட்டாசும் வேறு,
ஒன்றை சிந்தித்துபார்!
சாலையில் நீ வெடிக்கின்ற
வெடியின் சிறு தீப்பொறி
தீக்கடலாய் மாறிடும்
அருகிலுள்ள வாகனத்தில் பட்டால்,
அப்போது நீ மட்டுமல்ல
அவ்வூரே அழிந்திடும்?!!....

இதற்காக பட்டாசு வெடிக்காதே
என கூறவில்லை - வெடி,
பொது இடம் தவிர்த்து வேறு
எங்காவது சென்று வெடி.
வீணான பொருள், அமைதி
உயிர் இழப்பாவது குறையும்.

இதை பற்றி என்றாவது
நீ நேரம் செலவிட்டு சிந்தித்துள்ளாயா?
இனிமேலாவது சிந்தனைசெய்,
அதற்குதான் மூளையும் உடலும்!
அதற்கு பிறகாவது
வீனான செலவை குறை,
நாட்டின் வளர்ச்சிக்கு உழை,
அவசியம் சட்ட அறிவை பெற்றிடு,
தூய்மையான உலகை படைத்திடு

Monday, September 6, 2010

சிந்தியுங்கள் தோழர்களே!!!

இந்தியா ஒழிக!!! இந்திய அரசு ஒழிக!!!

நான் சமீபத்தில் கடந்த ஆண்டு நடந்த வைகோ மற்றும் சீமான் அவர்களின் மாநாடு மற்றும் கட்சி கூடங்களில் நடந்த சொற்பொழிவின் வீடியோ காட்சிகளை பார்த்தேன்.பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.நீங்கள் மேலே கண்ட வாசகம் சீமான் அவர்களின் திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கம் ஈழத்திற்கு ஆதரவாக நடத்திய மாநாடில் மாநாடுக்கு வந்தவர்கள் சிலர் பேசியது.தமிழக மீனவர்கள் சுட்டு கொள்ள படுவதாகவும் அவர்களின் பாதுகாப்பிற்கு இந்திய அரசு எந்த மதிப்பும் அளிக்க வில்லை என்றும் சீமான் பேசினார்.இந்திய மீனவர்கள் கட்ச தீவு வரை மீன் பிடிக்க இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இந்திய மீனவர்களை அனுமதிப்பது என்று இந்திய-இலங்கை ஒபந்தம் கூறியது.ஆனால் இன்று அந்து மீறப்பட்டுள்ளது.அதோடு மட்டும் இன்றி இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதலும் நடத்துகிறது.இது மிக பெரிய தவறு.இதில் இந்தியாவின் தவறு ஒன்று இல்லை.இது ஆட்சியில் இருப்பவனின் தவறு அவனை தட்டி கேட்காமல்,ஓட்டு அதிகாரத்தை முறையாகபயன்படுத்தாமல்,இந்தியா ஒழிக!!! இந்திய அரசு ஒழிக!!! என்று குரல் கொடுப்பது மகா முட்டாள் தனம்!!!
இது
ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் ம தி மு க தலைவர் வைகோ அவர்களின் பேச்சை கேட்டபோது இன்னொரு அதிர்ச்சி.2009 ம் ஆண்டு ஜூன் மாதம் திருச்சியில் நடந்தது.அதில் வைகோ அவர்கள் இந்திய அரசு இலங்கைக்கு ராணுவ தளவாடங்கள்,ராணுவ பயிற்சிகள் தருவதாகவும் கூறினார்.இந்த நிலை நீடித்தால் இன்னும் 10-15 வருடங்களில் இந்திய வரைபடத்தில் தமிழ் நாடு என்னும் ஒரு மாநிலம் இருக்காது,காரணம் தமிழ் நாடு தனி நாடாகிவிடும் என்று பேசினர்.அவர் பேசி முடித்ததும் பெரிய
கைதட்டுகள்.நான் வீடியோவில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன்.காரணம் இந்த வைகோ தான் ஒருசில வருடங்களுக்கு முன்பு பெரியார் தீவு திடலில் நடந்த மாநாடு ஒன்றில் இந்திய அரசுக்கு ஆதரவாக பேசினார்.அவர் அப்போது இந்திய அரசுக்கு ஆதரவாக பேச காரணம் திமுக-காங்கரஸ் உடனான கூட்டணி.இன்று இந்திய அரசை எதிர்க்க காரணம் திமுக-காங்கிரஸ் கு எதிரான கூட்டணி.இப்படி கூட்டணி மாற மாற இவர்களின் வார்த்தைகளும் மாறுகின்றன.இப்படி வார்த்தைகளை மாற்றி மாற்றி பேசுபவர்கள் ஈழத்தை காக்கிறாராம்.இதை விட கொடுமை தமிழ் ஈழம் என்பது தமிழர்களின் மிகபெரிய பிரச்சனை இப்படி பொதுவான பிரச்சினை இவர்களின் அரசியல் தேவைகாக பந்தாடபடுகிறது.நாமும் வெக்கம் இல்லாமல் கைதட்டி சிரிக்கிறோம்.
பேரறிஞர் அண்ணா சொல்லுவார் மாநாட்டில் மேடைக்கு கீழே இருப்பவன் கை தட்டுவதை விட்டு விட்டு மேடையில் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதை புரிந்து கொண்டால் மேடையில் யாரும் பேச தயங்குவார்கள்.கீழே இருப்பவன் வெறும் கை மட்டும் தட்டும் வரை மேடையில் இருப்பவன் என்ன வேண்டுமானாலும் பேசுவான்.நாம் இன்னும் கை மட்டும் தட்டி கொண்டு இருப்பதால் தான் மனிதாபிமான அடிப்படையான ஒரு பிரச்சனைக்காக சம்மந்தமே இல்லாமல் இன உணர்வை எழுப்புகிறார்கள்.ஈழத்தில் கொள்ளபடுவது தமிழன் அல்ல மனிதன்.இங்கே இன உணர்வு கூடாது மனித உணர்வே வேண்டும்.இதில் தமிழகத்தை விட இந்தியாவே அக்கறை காட்ட வேண்டும்.இதை நாம் இந்திய மக்களுக்கு உணர்த்த வேண்டும்.உணர மாறுபவர்களை மாற்ற வேண்டும் அதை விட்டு விட்டு தமிழ் நாட்டை தனி நாடகுவோம் என்பதும் அரசியல் தலைவர்களை,மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளை தரக்குறைவாக பேசுவதும் நாகரிகம் அற்றது.நாட்டின் நலன் மீது அக்கறை கொண்ட இந்த ஒரு நல்ல தலைவனும் மக்களின் உணர்வுகளை தூண்டி விட என்ன மாட்டான்.அப்படி துண்டி விட எண்ணுபவன் நல்ல தலைவனும் அல்ல.இனிமேலாவது யார் பேசினாலும் கைதட்டாமல் அவர் என பேசுகிறார் என்று சற்று காது கொடுத்து சிந்தியுங்கள் தோழர்களே!!!











Tuesday, August 10, 2010

புலிகளை காப்பாற்ற ஒன்று படுவோம்!!!

AIRCEL நிறுவனம் அழிந்துவரும் இனமான புலிகளை பாதுகாப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்கிவருகிறது.இந்த நிறுவனம் இதற்கென தனி இணைய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளது.புலிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்கள் இதில் உள்ளன.

thanks to http://www.sindhikkalam.blogspot.com/

இந்திய பணத்தின் புதிய வடிவம்:


இந்திய பணத்தின் புதிய வடிவம்:சர்வதேச அளவில் இந்திய ஒரு தவிர்க்க முடிய தனிபெரும் சக்தியாக வளர்ந்து வருகிறது.இந்த நேரத்தில்இந்திய அரசு இந்திய பணத்திற்கு புது வடிவம்கொடுத்துள்ளது.இந்திய நாணய புது வடிவம் பற்றியபோட்டி டெல்லி-இல் நடந்தது.இதில் சென்னை IIT மாணவர் உதயகுமார் என்பவர் வெற்றிஅடைந்தார்.இந்த நாணய அடையாளத்திற்குநாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.வெற்றிபெற்ற உதயகுமாருக்கு 2.5 லட்சம் பணம் பரிசாகதரப்பட்டது.அமெரிக்க டாலர்,பிரிட்டிஷ்பவுண்ட்ஸ்,ஐரோப்பியன் யுரோ,ஜப்பான் யன்,இனிஇதனை தொடர்ந்து இந்தியாவின் புதிய பணஅடையாளமும் பட்டியலிடப்படும்.இந்தஅடையாளம் தற்போது பயன்படுத்தப்படும் 'Re' அல்லது 'Rs' கு மாற்றாக பதிவுசெய்யப்படும்.தற்போது இதுபாகிஸ்தான்,நேபாள்,ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும்அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பயன் படுத்தப்படும்

Friday, July 30, 2010



இது தான் ஜனநாயகமா???


உலகின் மிகபெரிய ஜனநாயக நாடு இந்தியா.உண்மைதான்.உலகின் பல நாடுகள் இந்தியாவை மதிக்கின்றன.காரணம் இந்தியா 7 வது பெரிய நாடு என்பதற்கோ அல்லது உலகின் 6 வது இராணுவ வல்லரசு என்பதற்கோ அல்ல மாறாக மக்களாட்சியை 70 ஆண்டுகளை தாண்டியும் கடைபிடிக்கும் நாடு என்ற ஒரு காரணத்தால் மட்டுமே.உலகில் பல நாடுகள் இந்தியாவிற்கு சிவப்புகம்பலம் விரித்து வரவேற்பதற்கு இதுதான் காரணம்.ஆனால்
மக்களிடம் வாக்கு பெற்று நாடாளுமன்றம் செல்லும் வெற்றியாளர்கள் நாடு,மக்கள் பற்றி சிறிதும் சிந்திக்காமல் தன்னுடைய முன்னேற்றத்தை மட்டும் குறியாக கொண்டு செயல் படுகிறார்கள்.இவர்களுக்கு ஓட்டு போடும் மக்களின் நிலை ஆண்டிதான்.
இந்த வெற்றியாளர்கள் போய்வர இலவச விமானம்,முதல் வகுப்பு ரயிலில் இலவசம்,பாராளும் மன்றம் செல்ல வாகனம்,பேசுவதற்கு மைக்,உக்கார நாற்காலி,வியர்க்காமல் இருக்க மின்விசிறி இவை அனைத்தும் முற்றிலும் அனாவசியமாக எனக்கு படுகிறது.காரணம் அவர்கள் இலவசமாக பயன்படுத்தும் அனைத்தும் கடைசியாக செல்லும் இடம் காயலாங்கடை?
மீண்டும் புதிதாக பொறுத்த பல கோடி பணம் செலவாகும்.இதுக்கு பணம் மகளின் வரிப்பணம்??சரி இப்படி நடபவர்களுக்கு மக்கள் தரும் தண்டனை மறு தேர்தலில் வெற்றியை தருகிறார்கள் கேவலம் பணத்திற்காக???


பேரறிஞர் அண்ணா ஒரு கருத்தரங்கில் சொன்னார் 'இந்த நாடும் நாடு மக்களும் நாசமாய் போகட்டும் என்று' இந்த நிலை தொடருமானால் அண்ணாவின் இந்த சாபம் கட்டாயம் பழிக்கும் என்பதில் மற்று கருத்து இல்லை.