“எங்கெங்கு காணினும் போலிகளடா!” என்று சொல்லும் அளவுக்கு போலிகள் நிறைந்துள்ள காலமிது. போலி மருத்துவர்கள் கைது, போலி மருந்துகள் பறிமுதல் என்றெல்லாம் செய்திகள் வரும்போது நம் இதயத்துடிப்பு எகிறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
போலி எது? அசல் எது? என்று அவ்வளவு எளிதாகப் பிரித்தறிய இயன்றிடாதபடி நடமாடும் இந்த ”பசுத் தோல் போர்த்திய பன்றிகளிடமிருந்து” தப்பிக்க வழி தான் என்ன? என்று சிந்தித்துக் கொண்டிருந்த போது தான் நச்சென்று நான்கு இணைய தளங்கள் கிடைத்தன. அவற்றைப் பகிரும் முகம் தான் இப் பதிவு… நோய், மருந்து, மருத்துவம் பற்றிய இணைய தளங்கள்!
முதலாவதாக Drugs.Com இணைய தளம் பற்றி,
நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த மருந்து விற்பன்னர்கள் சேர்ந்த்து நடத்தும் Drugsite Trust ஆல் நடத்தப்படும் இணைய தளம். 107,000 மருந்துகள் A to Z வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த Food and Drug Administration (FDA) புதிதாக அங்கீகரிக்கும் மருந்துகள் பற்றிய விவரங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன. இத்தளத்தினை எவ்வாறு உபயோகிப்பது?
நம்ம ரஜினி சிவாஜி படத்துல வெள்ளையா மாற ஒரு கிரீம் போடுவாறே அது மாதிரி “ஆறே வாரங்களில் சிகப்பழகு பெற” எதாவது கிரீம் போடுறீங்களா? அந்த மருந்து அட்டையில் உள்ள அதன் வேதிப் பெயரைக் கண்டறியுங்கள்… உதாரணத்திற்கு, Hydroquinone. இதனை இத் தளத்தில் உள்ளீடு செய்து தேடு என்று கட்டளை பிறப்பித்தால்,
இந்த மருந்து நம் உடலில் செய்யும் மகத்துவங்கள் என்ன?
மருந்தை உபயோகிக்கும் முன் என்னென்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும்?
எவ்வாறு உபயோகிக்க வேண்டும்?
அளவுக்கு அதிகமானால் (Over Dose) என்னென்ன பிரச்சினைகள் வரும்?
என்று எல்லா விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கிறது.
இதன் மூலம் நமக்கு மருந்தெழுதிக் கொடுத்த Doctor, அந்த மருந்தை எடுத்துக் கொடுத்த Pharmacist ஆகியோர் (போலிகளாக இருக்கும் பட்சத்தில்) தவறுகளைத் தவிர்க்கலாம். உண்மையில் அந்த மருந்து நமக்குத் தேவை தானா? இல்லை காசுக்கு வந்த கேடா? என்றும் அறியலாம்.
மருந்துகளில் இருக்கும் USP, IP, BP என்ற எழுத்துக்களை பார்த்திருக்கிறீர்களா? அப்படின்னா,
USP: United States Pharmacopeia
IP: Indian Pharmacopeia
BP: British Pharmacopeia
என்று பொருள் படும் . எந்த நாட்டு மருத்துவ விதிகளின் படி உருவாக்கப்பட்ட கலவை இந்த மருந்து என்பதனைக் குறிக்கும்.
Wednesday, September 21, 2011
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment