நீ...
சுதந்திரவிழா கொண்டாட்டம்!
பாதுகாப்பு படை சூழ,
பாரததலைவர்கள் கொடியேற்றம்.
சுதந்திர நாட்டில் சுதந்திரமில்லை
நம் தேசிய கொடுயேற்ற.
ஏனிந்த நிலை? எதற்கிந்த பாதுகாப்பு?
உன் பாதுகாப்புக்காக
பாதுகாவலன் சுதந்திரம் பறிபோகிறதே.
அவர்களுக்கு சுதந்திரமில்லையா?
அதுமட்டுமா இங்கே.
கட்சி பொதுகூட்டமொன்று;
கட்டுக்கடங்கா மக்கள்வெள்ளம்;
கட்டுப்படுத்த காவலர் வெள்ளம்;
யாரந்த தலைவர்?
நீதியின் மறுபிறவியா?
ஏழையின் பாதுகாவலனா?
அப்படியே இருப்பினும்
அவனும் மனிதன்தானே;
அவன் தன்கடமையின்
சிறிதை தானே செய்தான் - பின்
ஏனிந்த ஆடம்பரம்?
எத்ற்கிந்த செலவுகள்?
அதனால் உனது நிலைதான் என்ன?
அதில் உன் பங்குதான் என்ன?
கட்சிக்காக கொடிபிடிக்கிறாய்,
போஸ்டரும் பேனரும் ஒட்டுகிறாய்,
கடவுளாகவும் அவரை வணங்குகிறாய்,
கூட்டம் சேர்க்கிறாய்,
ஆர்ப்பாட்டம் செய்கிறாய்,
ஆனால் நீ ஒன்றை சிந்தித்துபார்!
அன்றைய வருமானம் போயிற்று!
நாட்டின் வருமானம் போயிற்று!
நாட்டின் வளர்ச்சி போயிற்று!
நம் வரிபணம் இம்மாநாட்டினால்
மண்ணோடு மண்ணாய் போயிற்று!
மக்கள் சந்தோஷம் போயிற்று!
ஒலிஒளியால் அவ்வூர் மக்களின்
அமைதி போயிற்று!
கல்விகுழந்தைகளின் கல்வியும்
சிறு குழந்தையின் உறக்கமும்
அவ்வொலிஒளியால் காற்றாய் போயிற்று!
அதுமட்டுமா நடக்கிறது அங்கு,
மக்கள் நெரிசலால் அங்கு
சாலை திணருகிறது.
அத்தலைவரின் வருக்கைக்காக
சாலையோர தோரணங்களும்,
வானவேடிக்கையும், பட்டாசும் வேறு,
ஒன்றை சிந்தித்துபார்!
சாலையில் நீ வெடிக்கின்ற
வெடியின் சிறு தீப்பொறி
தீக்கடலாய் மாறிடும்
அருகிலுள்ள வாகனத்தில் பட்டால்,
அப்போது நீ மட்டுமல்ல
அவ்வூரே அழிந்திடும்?!!....
இதற்காக பட்டாசு வெடிக்காதே
என கூறவில்லை - வெடி,
பொது இடம் தவிர்த்து வேறு
எங்காவது சென்று வெடி.
வீணான பொருள், அமைதி
உயிர் இழப்பாவது குறையும்.
இதை பற்றி என்றாவது
நீ நேரம் செலவிட்டு சிந்தித்துள்ளாயா?
இனிமேலாவது சிந்தனைசெய்,
அதற்குதான் மூளையும் உடலும்!
அதற்கு பிறகாவது
வீனான செலவை குறை,
நாட்டின் வளர்ச்சிக்கு உழை,
அவசியம் சட்ட அறிவை பெற்றிடு,
தூய்மையான உலகை படைத்திடு
Monday, September 12, 2011
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment